ருத்ராட்சத்தில் இன்னும் பலவகையானவை உள்ளன. ருத்ராட்சத்தை நூலில் அணிவதாயின் சிவப்பு நிற நூலிலேயே அணிய வேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ கோர்த்து அணியலாம்.
ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அவரவரது லக்னாதிபதியின் நாளிலோ காலை நேரத்தில், ஒரு திருக்கோவிலில் பூஜை செய்து அணிய வேண்டும். அதற்கு முன்பாக ஒரு சிவனடியாரிடம் இருந்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏதாவது ஒரு ருத்ராட்சமணியை வாங்கி, அதை சுத்த ஜலத்தால் கழுவியபின்பு, காய்ச்சாத பசும்பால், தேன், கற் ஒரு நல்ல நாளில் நமக்குகந்த கண்டுப்பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து வித (பஞ்ச அமிர்தங்கள்) பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு சுத்தமாகத் துடைத்துவிட்டு, திருக்கோவிலுக்குச் சென்று அணிந்து கொள்ளலாம். தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரங்களையோ, தீட்சை தரப்பட்ட மந்திரங்களையோ நிச்சயமாகச் சொல்ல வேண்டும்.
ருத்ராட்சம் எல்லாவித மந்திரங்களுக்கும் ஏற்ற விளைவுகளை நிச்சயம் தர வல்லது. சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய, சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது.
Post a Comment