GuidePedia

0


ஜன., 30 - தை அமாவாசை

இந்தியாவிலேயே முதன் முறையாக நவ மாருதிக்கென அமைந்த முதல் கோயில், திண்டுக்கல்-மதுரை இடையேயுள்ள குலசேகரன்கோட்டையில் இருக்கிறது. தை அமாவாசையன்று இந்த ஆஞ்சநேயரை தரிசிப்பது சிறப்பு.

தல வரலாறு: ஆஞ்சநேயர் சஞ்சீவிமலையை எடுத்து தெற்கே செல்லும் போது விழுந்த துகள்கள் எல்லாம் மலைகளாகி சிறப்பு பெற்றுள்ளதாக பலதல புராணங்கள் சொல்கின்றன. திண்டுக்கல் அருகிலுள்ள குலசேகரன்கோட்டையிலுள்ள சிறுமலையும் இதன் துகளாகக் கருதப்படுகிறது. இந்த மலை அடிவாரத்தில், ஜெயவரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 
சிறப்பம்சம்: ஆஞ்சநேயர் கோயிலைச் சுற்றி, ஒரு நீரோடை மாலை போல் ஓடுகிறது. ஜெயவரத ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியக்கதிர் தினமும் காலை 7.00 முதல் 7.20 மணிக்குள் படர்கிறது.

நவ கல்யாண குணம்: ஆஞ்சநேயருக்கு ஒன்பது வகையான கல்யாண குணங்கள் உண்டு. அந்த குணங்களின் அடிப்படையில் இங்கு நவ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், ஒன்பது வகையான பிரார்த்தனைகளைச் செய்யலாம். 
தல பெருமை: இங்குள்ள மூலவர் சிலை செய்ய நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடியில் கல் எடுக்கப்பட்டது. கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சநேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயரைச் சுற்றி தெற்கு நோக்கி மூன்று ஆஞ்சநேயர்களும், மேற்கு நோக்கி இருவரும், வடக்கு நோக்கி மூவரும் அருள்பாலிக்கிறார்கள். அமாவாசையன்று இந்த ஆஞ்சநேயர்களை வணங்குவது சிறப்பு. குறிப்பாக, தை, ஆடி அமாவாசைகள் மிகவும் உகந்த நாட்கள். 
இருப்பிடம் : மதுரை- திண்டுக்கல் ரோட்டில் 32 கி.மீ.,
திறக்கும் நேரம் : காலை 8.00- இரவு 7.00. 
போன் : 99440 95626.

ஜெய வரத ஆஞ்சநேயர் - எல்லா செயல்களிலும் வெற்றி, சகல சவுபாக்கியங்களையும் பெறுதல்.
பக்த ஆஞ்சநேயர் - சனி தோஷத்தில் இருந்து விடுதலை.
பால ஆஞ்சநேயர் - புத்திர பாக்கியம்.
பவ்ய ஆஞ்சநேயர் - தொழில், வியாபாரம், பணியில் லாபம். 
யோக ஆஞ்சநேயர் - அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுதல்.
தியான ஆஞ்சநேயர் - மன அமைதி. 
வீர ஆஞ்சநேயர் - தைரியம் பெறுதல், பிரச்னைகளைச் சந்தித்தல்.
பஜன ஆஞ்சநேயர் - கல்வி, கலைகளில் சிறந்து விளங்குதல்.
தீர ஆஞ்சநேயர் - மனோபலம் பெறுதல்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...