ருத்ராட்சத்தின் சிறப்பு அதன் முகங்களேயாகும். இயற்கையாகவே அதன் மேற்பரப்பில், உருவாகும் நெடுக்கான கோடுகளே அதன் முகங்கள் எனப்படும். அவை ஒரு முகத்திலிருந்து, இருபத்தியோரு முகங்கள் வரையிலும் உள்ளன.
(அதற்கும் மேற்பட்ட முகங்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் உள்ளன) ஒரு இலந்தைப் பழத்தின் அளவில் இருப்பது மத்தியமான தரம் உள்ளதாகும். அதிலிருந்து அளவு கூடக்கூட அதன் தரமும் கூடும். அதிலிருந்து அளவு குறையக்குறைய தரமும் குறையும்.
ருத்ராட்சம் போன்றே பத்ராட்சம் என்ற ஒரு விதை வடிவமும் ருத்ராட்சத்திற்கு மாற்றாக உள்ளது. (தென் மாவட்டங்களில் அவை விளைகின்றன) அவை நல்ல பலன்களைத் தராது. ருத்ராட்சம் உண்மையானதா? என்று கண்டறிய பல ஆய்வு முறைகள் உள்ளன. குறிப்பாக, உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் அது மூழ்கும். மற்றவையாயின் மிதக்கும்.
கல்லில் உரைக்கும்போது தங்க நிறமான படிவுகள் கல்லில் பதிந்தால் அது உண்மையான ருத்ராட்சம். வேறோன்றாயின் அவ்வாறு படியாது. மேலும், இரண்டு செம்பு நாணயங்களுக்கு மத்தியில் ஒரு உண்மையான ருத்ராட்சத்தை வைத்தால், மின் தூண்டுதலின் காரணமாக அதில் சுழற்சி உண்டாகும்.
தாவர வகைகளிலேயே மின்சார சக்தி ஒரு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது ருத்ராட்சத்தில் மட்டும்தான். அதிலுள்ள நுட்பமான மின்னோட்டமானது நமது உடலிலுள்ள மின்சார சக்தியோடு மிக எளிதில் இணைந்து நல்ல உயிர்க்காந்தச் சூழலை உண்டாக்குவதால் பல நல்ல விஷயங்களை நாம் அனுபவ ரீதியாக உணரலாம்.
Post a Comment