
ஒருவரது வெளிநாட்டுத் தொடர்புகளை அமைத்து வைப்பதில் பிரதானமாக இருக்கும் ஒரு முக்கிய கிரகம் ராகு ஆகும். ஜாதக ரீதியாக ராகு 9–ம் இடத்தில், அல்லது 12–ம் இடத்தில் இருந்தாலோ, 7, 8, 9, 12 ஆகிய வீட்டு அதிபதிகளின் சம்பந்தம் பெற்றாலோ, ராகுவின் திசா புத்திகளில் வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்து, கோட்சார ராகுவின் சாதகமற்ற தன்மையால் தடை, தாமதம் ஏற்பட்டுத் தவிப்பவர்கள் கீழ்காணும் ஸ்ரீ துர்க்கா மந்திரத்தை 108 தடவை ஸ்படிக மணி மாலை கொண்டு, தொடர்ந்து 21 நாட்கள் ஜபம் செய்து வந்தால் நல்ல முறையில் வெளிநாட்டுப் பயணம் அமையும்.
‘ஓம் தும் துர்காயை நமஹ’
– என்ற இந்த மந்திரத்தை வீட்டில், ஒரு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் ஸ்ரீ துர்க்கா எந்திரமும், துர்க்கையின் படமும் வைத்து, கிழக்கு நோக்கி அமர்ந்து, 12 நெய் தீபம் ஏற்றி, ஜபிக்கத் தொடங்க வேண்டும்.
தூபம், தீபம், நைவேத்தியம், கந்தம், புஷ்பம் என்ற முறையில் பூஜையைச் செய்யலாம். 21 நாட்கள் பூஜை நிறைவுற்ற பிறகு, யந்திரம், ஜபமாலை, 21 நாட்கள் செய்த பூஜா நிர்மால்யங்கள் யாவற்றையும் நதியிலோ, கடலிலோ சேர்ப்பித்துவிட வேண்டும்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.