சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள்
1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூசை நடத்துவது
2. ஆலய உழவாரப்பணி செய்வது
3. ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு
4. திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது
5. பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து அடியார்களின் பெருமைகளை கூறுதல்
6. ஐந்தெழுத்தின் மகத்துவம் பற்றிக் கூறி செபிக்க சொல்வது
7. தீப ஒளி இல்லாமல் இருக்கும் ஆலயங்களில் விளக்கேற்றுவது , அடியார்களை அப்பணிக்கு தூண்டுவது தீப எண்ணைய் வாங்கித் தருவது
8. ஒரு கால பூசை இல்லாத கோவில்களில் பூசை நடக்க ஏற்பாடு செய்வது
9. பூசை செய்ய அர்ச்சகர் இல்லையா? அதற்கு ஏற்பாடு செய்து பூசை நடத்தலாம்.
10.கோவில்களில் ஓதுவாமூர்த்திகள் இருந்தால் சிறு பிள்ளைகளுக்கு திருமுறைகளை கற்றுக்கொடுக்க சொல்லலாம் அதனால் அவருக்கும் பிழைப்பு கிடைக்கும்
11. ஆலயம் வரும் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது
12. புண்ணியகாலம் உற்சவ காலங்களில் ஆலய தூய்மை செய்தல் தேர் வடம் இழுத்தல்
13. மதமாற்றத்தை தடுக்கலாம்
14. சைவ சின்னங்களான திருநீறு ருத்ராட்சம் அவைகளை அணியச் சொல்லி அதனால் வரும் பயன்களை எடுத்துக்கூறலாம்
15.மெய்கண்டசாத்திரங்கள் பற்றி சிறு சொற் பொழிவு போன்று உள்ளூர் தமிழாசிரியர்க ளை கொண்டு நடத்தலாம் நாம் அழைத்தால் போதும் அவர்கள் மறுக்க மாட்டார்கள்
16. கொஞ்சம் நல்ல ஒரு அணியாக இருந்தீர் களானால் 12 ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய குடமுழுக்கு நடத்தலாம்
17.கோ சாலை பசுக்களை பராமரிக்க உதவலாம்.
மேற்சொன்ன இந்த சிவ கைங்கரியங்கள் நடந்தாலே அந்த ஊர் செழிக்கும்.நம்முடைய குழந்தைகளை மேற்சொன்ன செயல்களுக்கு ஊக்குவிக்கலாம். (நன்றி-சிவனடிமை இணையம்)
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.