GuidePedia

0

பிரகஸ்பதி, தனகாரகன், புத்திகாரகன், லோகபூஜ்யர், வாகீசர், பீதாம்பரர், பொன்னன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் கொண்ட குருபகவானே, தேவர்களின் குரு; சகல சாஸ்திரங் களும் அறிந்தவர்; நவக்கிரகங் களில் சக்தி வாய்ந்தவர்!
இந்திரன் முதலான தேவர்கள் மட்டு மின்றி, வித்யாதரர், கின்னரர், கிம்புடர் ஆகியோரும் அடிக்கடி அசுரர்களின் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. மிகுந்த வலிமை, மந்திர சக்திகள், அற்புத அஸ்திரங்கள் போன்றவை தங்களிடம் இருந்தாலும், அசுரர்களை வெல்ல முடியாமல் திண்டாடினர் தேவர்கள்.
அசுரரை அழிப்பதற்கான வழிகேட்டு பிரம்மனைச் சரண் அடைந்தனர். நான்முகன், ''உங்களிடம் எவ்வளவு சக்தி கள் இருப்பினும், குருவின் துணையும், வழிகாட்டுதலும் இல்லாமல் பகைவரை வெல்ல முடியாது. எனவே, நீங்கள் ஒரு ஆச்சார்யனை துணை கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்தினார்.
அதன்படியே, தங்களுக்கு குருநாதர் வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் மும்மூர்த்தியரையும் குறித்து தவம் இருந்தனர் தேவர்கள். அவர்களின் தவத்தால் மகிழ்ந்த மும்மூர்த்திகளும், ''அதிக பலம் கொண்ட பிரகஸ் பதியை உங்களுக்கு குருவாக அளிக் கிறோம்!'' என்று அருள் புரிந்தனர்.
குருபகவானும் தனது திரிகால ஞானசக்தியாலும், ஆன்ம சக்தியாலும் அசுரர்களை வெற்றி கொள்ளும் தந்திரங்களைக் கூறி, தேவர்களின் இன்னல்களைத் துடைத்து, இன்புற வைத்தார்.
தேவர்களுக்கு மட்டுமா? தமது அருட்பார்வையால் நம்மையும் வாழ வைக்கும் நவக்கிரக தெய்வம் ஸ்ரீகுரு பகவான். தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம்- தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.
ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு இருக்கும் அமைப்பை கேசரி யோகம் (கெஜகேசரி) யோகம் என்பர். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்களால் பாதிப்புகள் இல்லை!
சந்திரனும், குருவும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்! இதனால் பேரும், புகழும் தேடி வரும்.
செவ்வாயும், குருவும் இணைந்து நின்றால் குருமங்கள யோகம். இதன் பலனாக நிலபுலன்கள், வண்டி- வாகன சேர்க்கை உண்டாகும்.
ராகு 6-ல் நின்று, கேந்திரத்தில் குரு இருந்தால், அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும். சகல சுகங்களும் சந்தோஷ மும் கிடைக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, பாவ கிரகங்களின் பார்வை இல்லாமல் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பெருமையுடன் வாழ்வார்.
சரி... குரு பலம் இல்லாதவர்களும் அவரின் திருவருளை பரிபூரணமாகப் பெறுவது எப்படி? இதற்கு, எளிய பரிகார வழிபாடுகள் உதவி செய்யும்.
குருவார விரதம் வியாழன் தோறும் விரதம் அனுஷ்டித்து, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று குருபகவானை வழிபட்டு வரலாம். நவக்கிரக க்ஷேத்திரங் களில் ஒன்றான ஆலங்குடிக்குச் சென்று தரிசிப்பது சிறப்பு. மட்டுமின்றி, குருவின் அதிதேவதைகளான பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள் பாலிக்கும் தலங்களை தரிசிப்பதும் நலம் பயக்கும்.
பரிகாரத் திருத்தலங்கள் குரு பலம் வேண்டும் மேஷ ராசிக்காரர்கள் ஆலங்குடிக்குச் சென்று தரிசிக்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் தரிசிக்க வேண்டிய தலம்- தென்குடித் திட்டை; மிதுனம்- தக்கோலம்; கடகம் - இலம்பயங்கோட்டூர்; சிம்மம் - திருப்புலிவனம்; கன்னி - பாடி (சென்னை); துலாம் - சுருட்டப்பள்ளி; விருச்சிகம்- புளியரை (தென்காசிக்கு அருகில்); தனுசு - உத்தமர்கோவில்; மகரம் - கோவிந்தவாடி அகரம்; கும்பம் - திருவொற்றியூர்; மீனம்- மயிலை ஸ்ரீதட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்).
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வியாழக் கிழமைகளில் தங்களுக்கு உரிய தலங்களுக்குச் சென்று, 5 நெய் தீபங்கள் ஏற்றி, மஞ்சள்
வஸ்திரம் சாத்தி, கொண்டைக் கடலை மாலை அல்லது சுண்டல் சமர்ப்பித்து, முல்லை அல்லது மஞ்சள் நிற சாமந்தி மலர்களால் அர்ச்சித்து வழிபட சகல நலன் களும் உண்டாகும்.
குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரக குருவையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு நலம் பெறலாம்.
ஸ்ரீகுரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வதாலும் பலன் கிடைக்கும்.
படத்தில்: ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி, வேதபுரி, தேனி,
படம்: தேனி ஈஸ்வர்
ஸ்ரீகுரு காயத்ரி
ரிஷபத்வஜாய வித்மஹே| க்ருணி ஹஸ்தாய தீமஹி|தன்னோ குரு ப்ரசோதயாத்||
குரு பகவான் வழிபாட்டு ஸ்லோகம்
குருவின் அருளாலே குற்றமெல்லாம் போகும் மருள் நீங்கி மாட்சியே ஓங்கும் - சுர குருவே உம்மைப் பணிந்தேன் இனி ஓர் பாவமும் சூழாது எம்மைக் காப்பாய் நீயே!
-வசந்தா சுரேஷ்குமார், சென்னை-4
-விகடன் -

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...