மேலும் இத்தலத்திற்கு சிவராஜதானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டது மதுரை.
3* மதுரையே மீனாட்சி: மீனாட்சியே மதுரை என்று கூறுமளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர்.
* இங்குள்ள மீனாட்சி அம்மனது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது.
* முன் போன்ற கண்கள் கொண்டவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட்கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.
* மீனாட்சி அம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.
* ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.
4* ஸ்ரீ மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும் 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறை.
* மீனாட்சி அம்மனை திருமணம் புரிவதற்காக, சுடலையாண்டியான ஈசன், மணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.
* பொற்றாமரைக் குளம், வைகை நதி ஆகிய தீர்த்தங்கள் இந்தத் தலத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. ஏழு கடல், கொண்டாழி, கிருதமாலை, தெப்பக்குளம் புறத்தொட்டி நின்மாலிய தீர்த்தம் ஆகியன மறைந்து விட்டன.
* சிவபெருமானால் ஆதியில் படைக்கப்பட்டது இங்குள்ள பொற்றாமரைக் குளம். எனவே இது ஆதி தீர்த்தம் எனப்படுகிறது. இதற்குச் சுற்றிலும் உள்ள மண்டபச் சுவர்களில் திரு5விளையாடல் புராணக்கதைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தெற்குச் சுவரில் 1,330 குறள்களும் சலவைக் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
* மற்ற இடங்களில் இடப்பாதம் தூக்கி ஆடும் நடராஜ மூர்த்தி, மதுரை வெள்ளியம்பலத்தில் தன் வல
ப் பாதத்தைத் தூக்கி நடனமாடுகிறார். பாண்டிய மன்னன் ராஜசேகரனுக்காக இறைவன் இப்படிக் காட்சியளித்ததாக ஐதீகம்.
* இந்தக் கோயிலின் கிழக்குக் கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கிபி.(1216-1238) கட்டப்பட்டதால் இது சுந்த்ர பாண்டியன் கோபுரம் எனப்படுகிறது. இதில் 1.011 சுதை வடிவங்கள் உள்ளன.
* தெற்குக் கோபுரத்தின் உயரம் 152 அடி. இதில் 1,511 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இதை கிபி.1559ல் சிராலைச் செவ்வந்தி மூர்த்தி என்பவர் கட்டினார்.
* மேற்குக் கோபுரத்தைக் கட்டியவர் பராக்கிரம பாண்டியன் (கிபி. 1315 – 1347) இதில் உள்ள சுதை வடிவங்கள் 1.124.
* வடக்குக் கோபுரம், ஒன்பது நிலைகள் கொண்டது. கட்டியவர் கிருஷ்ண வீரப்ப நாயக்கர் (1564 – 1572). 404 சுதைச் சிற்பங்கள் கொண்ட இதை மொட்டைக் கோபுரம் என்கிறார்கள்.
7
* இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது ஆயிரங்கால் மண்டபம். இதில் 985 தூண்கள் உள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் இவை நேர் வரிசையில் காட்சியளிக்கின்றன.
* ஆடி மாதம் விவசாயிகள் விதைக்கும் காலமானதால் கிராம மக்களும் விவசாயிகளும் பங்கு பெறுவதற்காக திருமலை நாயக்கர் ஆடித் திருவிழாவை
* கள்ளழகர் சித்திரைத் திருவிழா மதுரைக்கு அருகிலுள்ள தேனூர் என்ற கிராமத்தில் நடந்து வந்தது. அப்போது மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க அவர் தேனூஐக்கு எழுந்தருள்வார். பொது மக்களின் சௌகரியத்துக்காக இதை சித்திரை மாதத்தில் திருககல்யாண உற்சவமாகவும் வைகையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமாகவும் மன்னர் திருமலை நாயக்கர் மாற்றி அமைத்தார்., சித்திரை மாதத்துக்கு மாற்றி அமைத்தார்.
* இங்குள்ள தங்க ரதம் சிறப்பு வாய்ந்தது. ஏழு கிலோ தங்கம் (875 பவுன்), 78 கிலோ வெள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி, அன்றைய மதிப்பில் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் தங்க ரதம் 26 ஆண்டுகளுக்கு முன் உ8ருவாக்கப்பட்டது.
* இந்த ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள விபூதிப் பிள்ளையார் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் இவருக்கு விபூதி அபிஷேகம் செய்வதால் எப்போதும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார்.
* மதுரைக் கோயிலில் மொத்தம் 231 உற்சவத் திருவுருவங்களும் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வாகனங்களும், சப்பரங்களும், அம்மன் தேர், சுவாமி தேர், திருவாதவூர்த் தேர் ஆகியவையும் உள்ளன.
* சுந்தரேஸ்வரர் சந்நிதியில் கம்பத்தடி மண்டபத்தில் வலப்புறமாக புலிக்கால் கணேசரை தரிசிக்கலாம். பெண்மைத் தோற்றம் இவரது விசேஷ அம்சம்.
* ஆதிசங்கரர், மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.
Post a Comment