GuidePedia

0
இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.

அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. மாலையில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி இல்லாதவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும். 

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுத்து பின்னர் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...