அவர் சமரச சன்மார்க்க நெறியை உபதேசிக்க வள்ளலாராக அவதரித்தார் நான் பூமிக்கு வருவிக்க உற்றேன் என்ற அவரது வாசகத்தின் பொருள் அதற்கு முன்பு பூமிக்கு வெளியே இருந்தேன் என்பதாகும் அதாவது முன்பே பரலோகம் போனவன் என்பது பொருள்
வள்ளலார் பரலோகத்திலிருந்து பூமிக்கு வருவிக்க உற்றதன் நோக்கம் புலால் உண்ணாமையை நிலைநாட்டுவது மட்டுமல்ல ; அதை ஆன்மீக தொடர்பு இல்லாத புளு கிராஸ் காரர்களும் - இன்னும் பலரும் நன்றாகவே செய்து வருகிறார்கள்
1 )சித்தர்கள் நெறி என்பது கடவுளை மறைமுகமாக மறுக்கும் நவீன நாத்திகவாதம் போல காலப்போக்கில் வழுவி நின்றதே அதை மாற்றி அருட்பெரும் ஜோதி என்ற அருப ஏக இறை கொள்கையை நிலைநாட்டுவது
2 ) பிறவாப்பெருநிலை - ஜீவசமாதி என்பது இலக்கு என்பதாக
ஒரு இரண்டாம் நிலை பிரபலமடைவதை மாற்றி மரணமில்லா பெருவாழ்வு - அதாவது ஒளி சரீரம் பெற்று பரலோகம் போவதே சரியானது என்பதை நிலைநாட்டுவது
3 ) இதுவரை பூமியில் ஆங்காங்கு பகுதி பகுதியா வெளியாக்கப்பட்டு மதங்களாக சீரளிந்துள்ள வேதங்கள் அனைத்தையும் அவற்றின் உண்மைகளை சுவீகரித்து சமப்படுத்தும் சமரச வேதம் வெளியரங்கமாக அடித்தளம் உண்டாக்குவது
இம்மூன்றும்தான் வள்ளலாரின் வருகையின் ரகசியங்கள்
இதை உணராத வள்ளலாரின் சீடர்கள் வெறும் புளு கிராஸ் காரர்களே
வள்ளலாரின் உண்மையான நெறி பிரபலமாகும் வரை அவர் பெயரை சிலர் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் அந்த சின்ன பணியை மட்டுமே இதுவரை பெரும்பாலான வள்ளலார் இயக்கங்கள் செய்து கொண்டுள்ளன
ஜீவ காருண்யம் மோட்ச வீட்டின் திறவுகோல் என்றுதான் வள்ளலார் சொன்னார் அது ஒரு கதவு மட்டுமே அதில் பிரவேசித்து உள்ளே ரெம்ப தூரம் செல்லவேண்டும்
ஜீவ காருண்யம் மட்டுமே மோட்ச வீடு என்பதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது
திறவுகோல் இருந்தால் மட்டுமே கதவை திறக்கமுடியும்
கதவு என்பது நமது முன்னேற்றத்தை அல்லது மோட்சத்தை தடை செய்வது - மாயை
அதை வெல்வதற்கு ஜீவ காருண்யம் ஒரு முக்கியமான திறவுகோல்
இது மட்டுமே திறவு கோலுமல்ல இன்னும் எத்தனையோ திறவுகோல் உண்டு
அப்படி திறந்து விட்டாலே மோட்சமும் அல்ல அதன் பிறகும் ரெம்ப துரம் முன்னேற வேண்டும்
ஆனால் சீடர்களைப்பிடிக்கும் ஒரு அஞ்ஞானம் இது மட்டும் இது மட்டும் தான் என அந்தக்கதவிலேயே நின்று பெருமை பாராட்டிக்கொண்டிருப்பது
Post a Comment