GuidePedia
Latest News

0



வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்- "உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம்"


வற்றாப்பளைக்
கண்ணகி அம்மன் கோயில் வற்றாப்பளை, முல்லைத்தீவு, இலங்கை. ஆரம்பகாலம் முதல்
திராவிட மக்கள் மத்தியில், பெண்தெய்வ வழிபாடு வேரூன்றியிருந்தது.
மரபுவழியாகப் பெண்ணைத் தெய்வமாகவும், தெய்வத்தைப் பெண்ணாகவும்
போற்றியுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள
மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களிலே கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில், பெண்
வடிவங்கள் பதித்த முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. பண்டைய மக்கள் தமக்கு
வளங்களை அள்ளிக்கொடுக்கும் பூமியைப் போற்றித் தரைப் பெண்ணாக
வழிபட்டுள்ளனர். திராவிடப் பண்பாடும், ஆரியப் பண்பாடும் கலந்து உருவாகிய
இந்துசமயத்திலும், பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
ஈழத்தில், பெண் தெய்வ வழிபாட்டிலும் இருவேறு விதமான வழிபாட்டு முறைகள்
காணப்படுகின்றன. ஆகம வழிபாட்டு முறை தழுவிய சாக்தம், சக்தியை முழுமுதற்
கடவுளாகக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால், சிவாகம முறை தழுவாது, தமது
விருப்பப்படி பூசை செய்து வழிபடும் ஆன்மார்த்த பூசை முறையும் பெண் தெய்வ
வழிபாட்டில் பிரபலம் பெற்ற வழிபாட்டு முறையாகக் காணப்படுகின்றது. இதனைக்
கிராமிய வழிபாட்டு முறையெனவும் கூறுவர். ஆரியரின் பண்பாடும் ஆதிக்கமும்,
திராவிட வழிபாட்டு முறையில் ஊடுருவு முன்னர், ஈழத்தில், ஆன்மார்த்த வழிபாடு
மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்டுள்ளது.





ஆலயத்தின் தோற்றப்படம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
ஈழத்துக்கு
இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதந்தோறும் தலைநகரிற்
பத்தினிக்குப் பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பை யானையில் ஏற்றி
ஊர்வலமாகக் கொண்டு சென்று பெருவிழா கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு
தொட்டு இன்றுவரை சேரநாட்டின் எல்லப்பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கி
வருதல் குறிப்பிடத்தக்கது. கயவாகு மன்னன் கண்ணகி விழாவிற் கலந்து திரும்பி
வந்த போது அதே றையைத்தான் பின்பற்றினான் எனக்கருத வேண்டியுள்ளது. இது கண்டி
மாநகரில் நடைபெறும் எசல பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் எனக் கலாயோகி
ஆனந்த குமாரசுவாமி தனது 'மத்தியகாலத்துச் சிங்களக்கலை' என்னும் நூலிற்
கூறியிருந்தார். 'ஆடித்திங்களகவையினாங் கோடி பாடி விழா' பற்றிச்
சிலப்பதிகாரம் கூறுவதும் ஆடி ஆவணி மாதங்களில் எசல பெரஹரா நடைபெறுவதும்
சான்றாக அமைகின்றது.

ஆலயத்தின் வரலாற்றை சொல்லும் சிற்பங்கள்









--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வைகாசி விசாகப்பொங்கல்
வைகாசி
மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப்
பொங்கலாகும். இத்திங்கள் இரவு ‘வளந்து நேருதல்’ என்னும் நிகழ்வு நடைபெறும்.
பூசாரியார் வளந்து (பானை) ஏந்தி ஆடுவார். ஆட்டத்தின் உச்சக்கட்டத்தில்
வளந்தினை அறிந்து ஏந்துவார். இறுதியில் நிலத்தில் பள்ளமாக வெட்டி
அமைக்கப்பட்ட அடுப்பில் வளத்தினை வைப்பார். பின் பொங்கலிடும் அரிசியை ஏந்தி
ஆடுவார். ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி மேலே எறிவார். இவ்வரிசிகள்
நிலத்தில் விழுவதில்லை. அத்தோடு வளந்துப் பானையில் சூத்திரதாரணம்
செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை
பெருநெருப்பிலும் எரிந்து சாம்பராகாது, கட்டியபடியே காணப்படுவது மிக
அதிசயமானது




















....................................................................................
நன்றி: 

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...