
தென்னாடுடைய சிவனார் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பது தெரியும். அதில், நரியைப் பரியாக்கிய சம்பவமும் ஒன்று என்பதையும் அறிவோம். சிவபெருமான், நரியைப் பரியாக்கிய அந்த வனப்பகுதிதான், மதுரையில் இன்றைக்கு நரிமேடு என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள விநாயகரை, காட்டுப்பிள்ளையார் என அழைக்கின்றனர், பக்தர்கள்.
மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். முன்பொரு காலத்தில் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியருளினாராம் ஸ்ரீகணபதி. இந்தக் கோயில் கருவறையில், அம்மை ஸ்ரீமீனாட்சியுடனும் அப்பன் ஸ்ரீசுந்தரேஸ்வரருடனும் திருக்காட்சி தருகிறார் ஸ்ரீகாட்டுப்பிள்ளையார்.
பணி நிமித்தம் காரணமாக, பிறந்த ஊரில் பெற்றோரை விட்டுவிட்டு, வெளியூரில் வேலை பார்க்கிற அன்பர்கள் இங்கு வந்து, அம்மையப்பனுடன் தரிசனம் தரும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கி வழிபட்டால், விரைவில் ஒன்றுசேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம்!
http://www.vikatan.com/sakthi/2011/09/ywvlnj/images/p78a.ஜபக்
ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி நாளில் வந்து வணங்கி, வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் தேடிவரும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.
சிவனாருக்கும் அம்பிகைக்கும் நந்தி வாகனங்கள் இருப்பது விசேஷ அமைப்பு! ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமாரி யம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோருக் கும் சந்நிதிகள் உள்ளன.
விநாயக சதுர்த்தி நாளில், அம்மையப்பனுடன் வீற்றிருக்கும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கு வோம்; வாழ்வாங்கு வாழ்வோம்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.