GuidePedia

0
நீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி

பிரணவ வடிவான பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, எந்தவொரு காரியத்தையும் துவங்க, வெற்றி நிச்சயம் என்பது புராணங்களின் அறிவுரை. தொழில், உத்தியோகம் என்றில்லை... கல்வியிலும் சிறக்க, கணபதியை வழிபட வேண்டுமாம். 'யானையைப் போல் ஞாபக சக்தி மிகுந்த ஜீவன் வேறில்லை. எனவே ஆனைமுகனை வணங்கினால், ஞாபக சக்தி அதிகரிக் கும்; பரீட்சையில் வெற்றி மட்டுமின்றி, அதிக மதிப்பெண்களும் கிடைக்கும்' என்பது பெரியோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிக்கிறார் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்.

தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஊர் பேராவூரணி. இங்கு குடிகொண்டிருக்கும் நீலகண்ட பிள்ளையார், இந்தப் பகுதி மாணவர் களின் கண்கண்ட தெய்வம்! பொதுத் தேர்வு காலத்தில், 'ஹால் டிக்கெட்'டை இவரின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்வதால், இவரை 'ஹால் டிக்கெட் பிள்ளையார்' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

இவர், துவக்கத்தில் சிறிய கொட்டகையில் குடியிருந்தாராம். துளசேந்திரன் என்ற மன்னனின் அமைச்சர் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி. அவர் ஒருமுறை இந்த வழியே வந்தபோது, நீலகண்ட பிள்ளையாரை வழிபட்டு, விபூதி வாங்கிப் பூசிக்கொள்ள... மறுநாளே நோய் குணமானதாம். இதையறிந்து சிலிர்ப்படைந்த மன்னர், இந்தப் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினாராம். 'உருவத்தால் ஸ்ரீவிநாயகர்; நீலகண்டன் எனும் திருநாமத் தால் ஈசன்; சக்திபீடத்தில் அமைந்த தலம் என்பதால் உமையவளின் அம்சம்... ஆகவே, சக்தி வாய்ந்தவர் இவர்' என்கின்றனர் பக்தர்கள்.

இவருக்கு அருகம்புல் சார்த்தி, 'பாலும் தெளிதேனும்' பாடலைப் பாடி, தேர்வு எண் (ஹால் டிக்கெட்), பேனா ஆகியவற்றை திருப்பாதத்தில் வைத்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட, தேர்வில் வெற்றி உறுதி என்பது நம்பிக்கை!

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...