GuidePedia
Latest News

0
சூரிய காயத்ரி

ஓம் பாஸ்கராய வித்மஹே!
மஹாத்யுதிகராய தீமஹி!!
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!!

சந்திர காயத்ரி

ஸீதப்பரபாய வித்மஹே!
ஷோடச கராய தீமஹி!!
தந்நோ சோமப் ப்ரசோதயாத்!!

அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ

ஓம் அங்காரகாய வித்மஹே!
பூமிபாலாய தீமஹி!!
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்!!

புதன் காயத்ரீ

புதகிரஹாய வித்மஹே!
இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ ஸௌமிய ப்ரசோதயாத்!!

குரு (வியாழன்) காயத்ரி

ஸுராச்சார்யாய வித்மஹே!
சுரஸ்ரேஷ்டாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!


சுக்கிர (வெள்ளி) காயத்ரி

ராஜதாபாய வித்மஹே!
ப்ருகு சுதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!

சனி காயத்ரி

சனீஸ்வராய வித்மஹே!
சாயா புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

ராகு காயத்ரி

ஸூக தந்தாய வித்மஹே!
உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!

கேது காயத்ரி

சித்ர வர்ணாய வித்மஹே!
ஸர்ப்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

சூரியன் 

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய்!

சந்திரன் (திங்கள்)


எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!

செவ்வாய் (அங்காரகன்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன் 

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு (வியாழன்)

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வா1

சுக்கிரன் (வெள்ளி)

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!

சனீஸ்வரன் (சனி) 

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா.!

இராகுபகவான் (ராகு)

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்யா போற்றி!

கேதுபகவான் (கேது)

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.!

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...