GuidePedia

0
ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் புண்ணிய காலம் என்று வகுக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் சூரியனிடம் இருந்து சூட்சும சக்திகள் அதிகமாக வெளிப்படும் பிராண வாயு பூமிக்கு அதிகமாகக் கிடைக்கும். எனவே உயிர்களுக்கு முக்கிய தேவையான ஆதாரசக்தியை அதிகமாக தந்து நம்மை காக்கும் மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. 

ஆடி மாதம் முதல் அதிகாலையில் நாம் இந்த கதீர் வீச்சுகளை நமக்கு நமது உடலில் எடுத்து கொள்ள அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்ப்படுத்தி வைத்தார்கள் அப்படி செல்வதன் மூலம் அதன் கதிர்கள் நம்மில் சென்று நம்மை தூய்மை படுத்தும் நமது கெட்ட சக்திகளை அழிக்கும்.... என்று கருதப்படுகிறது. 

இப்படித்தான் ஆடி வழிபாடு தொடங்கியது. ஆடி என்பது ஒரு தேவமங்கை ஆவாள். ஒரு தடவை அவள் பாம்பாக மாறி கைலாயத்தில் நுழைந்து உமையவள் வேடம் தரித்து சிவனை அடைய அடைய முயற்சி செய்தாள். அவளின் கசப்பு உணர்வை உணர்ந்த இறைவன் ஆடியை சூலாயுதத்தால் அழிக்க முற்பட்டார். 

அப்போது அதில் இருந்து வெளிபட்ட தீ பிழம்பு ஆடியை புனிதம் அடைய வைத்தது இருந்து சிவன் அவருக்கு ஒரு சாபம் கொடுத்து வரம் ஒன்று கொடுத்தார். கசப்பான மரமாக பூலோகத்தில் அவதரிக்கவும் அம்மரத்தில் ஆதிபராசக்தி வசம் செய்வார் என்றும் ஆடி வெப்பம் மரமாக மாறி அம்மரத்தை அம்மனின் அம்சம் கொண்டு வழிபடுவர்கள் அனைவருக்கும் நாக தோஷம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாவ வினைகள் தீர்த்த அருள் புரிய வரம் தந்தார் 

இவ்வாறு மக்கள் ஆடி மாத காலத்தில் அம்மன் வழிபாடு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளதாக என்கிறது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் அனைவராலும் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபடுவது மிக நல்லது. ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்குரிய திருநாளாக கொண்டாடப்படுகிறது 

அதே போல ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலையில் பிதுர் பூஜைகளுக்கான பூஜை செய்வது அவசியம் என்று ஆன்மீக நூல்கள் சொல்கின்றன. ஆடி மாத ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் அரசமரத்தைச் சுற்றி வலம் வந்து நாம் வழிபாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். 

பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்ல விருத்தி ஏற்ப்படும். ஆடி மாதப் பவுர்ணமி வியாச பூஜை என்று சிறப்பிக்கபடுகிறது அந்நாளில் நமக்கு கல்வி சொல்லி தந்த ஆசானை நினைத்து வழிபட்டால் கல்வி மற்றும் பதவிகளில் சிறந்து நம் வாழ்வில் நிலை கொள்ள முடியும். 

ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடன் பகவான் அதனால் அந்த நன்னாளில் சுவாதி நட்சத்திர நாளில் வானில் பறக்கும் கருடனை தரிசிப்பது மிக நல்லது.....! இப்படி ஆடி மாதம் முழுவதும் தெய்வ வழி பாடுகள் மற்றும் விழாக்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டால், வாழ்வில் வசந்தம் மற்றும் இன்பம் நிலைத்து நிற்கும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...