GuidePedia
Latest News

0
(வெள்ளி) வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் வைத்து. லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். 

அவர்களை அம்மனாக பாவித்து அமுதளிக்க வேண்டும். ஆடி வெள்ளியில் தான் வரலட்சுமி விரதம் வரும். பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108,1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள். தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். 

ஒன்பது சிவாச் சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும். நவசக்திகள் பராசக்தியின் ஒன்பது சக்தி அம்சங்களாகும். அவை சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரவுத்திரி, கேட்டை, வாமை என்பவைகளாகும். 

இதனை தீப்தை, சூட்சுமை, வாமை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வியுக்தை, சர்வதோ முக்தை என்றும் அழைப்பார்கள். புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். 
ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கு பூஜை
ஐந்தாம் வெள்ளி அன்று தேர்த்திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக்கோலம் தான். 

சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. 

ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும். 

வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம். அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும். திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக் கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள். 

ஆடி வளர் பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம் முன் கோலமிட்டு மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின் தான் துளசிக்கு நீருற்ற வேண்டும்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...