GuidePedia

0
ஸ்படிக லிங்க வழிபாடு
ஸ்படிக லிங்க தத்துவம்:
யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள்.
அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும்.
அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள்.
இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும்.
அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.
அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.
நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல.
நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே.
லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!
பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில்
என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?
ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது.
ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும்.
அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும்.
அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.
நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது.
அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும்.
எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நமக்கு ஒரு கஷ்டம் என்றால்,
"நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.
ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...