நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1. முதலாம் படி :-
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
VII Step
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களி ன் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக் கம்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.