GuidePedia

0
ஏழரை சனி;
----------------

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.
ஜென்ம ராசிக்கு முதல் ராசி, ஜென்ம ராசி(சுயராசி), ஜென்ம ராசிக்கு பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரைச் சனி என்பார்கள்.
80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர் விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.
முதல் சுற்று: மங்கு சனி.
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி.
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி(மரணச்சனி)!
இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!
மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்.
சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது.
அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.
ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால், அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது.
அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்தான் அனுபவிக்க நேரிடும்.
அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிபிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது.
சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
ஏழரைச் சனியின் முதல் இரண்டரை வருடங்களை விரையச்சனி என்பார்கள்.
கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம்.
விரையச் சனி காலத்தில் பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே கழியும்.
அடுத்த இரண்டரை வருடங்களை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம்.
அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த இரண்டரை வருடங்களை கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.
பொங்கு சனியில் (அதாவது இரண்டாவது சுற்றில்) ஜாதகனைச் சனீஷ்வரன் கைதூக்கிவிடுவான்.
பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம்.
ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி மேலே அனுப்பி வைத்து விடுவார்..!
அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள்.
ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானதல்ல!
ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பதைப் பொறுத்தும் வேறுபடலாம்..!
அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும் சனி அனுப்பிவைப்பார்.
இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும் கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!
...

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...