
இறைவன் சன்னிதானத்தில், பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவதற்கு இன்ன எண்ணெய், இன்ன திரி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதே போல இன்ன உலோகத்தால் ஆன விளக்கு வேண்டும் என்ற விதி இருக்கிறதா? பொதுவாக என்ன விளக்கில் தீபம் ஏற்றினால் சிறப்பு?
உலோகங்களில் மிக உயர்ந்தது தங்கம். அதன் விலை அதிகம். கிடைப்பது அரிது என்பதனால் அதை உயர்ந்த உலோகமாக மனிதர்கள் கருதுகிறார்களோ என்று நினைக்கலாம். அது சரியா? தவறா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் மற்ற உலோகங்களை விட தங்கத்தில் பல சிறப்புகள் இருக்கிறது. அதனால் தான் அதை சிறந்த உலோகம் என்று நான் கருதுகிறேன்.
அப்படிப்பட்ட தங்கத்தில் விளக்கு செய்து, அதில் தீபம் ஏற்றி வழிபடுவது தான் சிறந்தது என்று மிக சுலபமாக நான் கூறிவிடுவேன். ஆனால் தாய்மார்கள் என்னை அதிகமான வசவு மொழிகளால் அர்ச்சனை செய்து விடுவார்கள். எனவே அதை பொதுவாக என்று மட்டும் கூறிவிட்டு வற்புறுத்தாமல் விட்டு விடுகிறேன்.
லஷ்மி கடாட்சம் வேண்டுமானால் வெள்ளி விளக்கிலும், ஆரோக்யம் ஏற்பட வெண்கல விளக்கிலும், தேவதைகளின் வசியம் ஏற்பட பஞ்சலோக விளக்கிலும், சனிதோஷம் விலக இரும்பு விளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும். இவை அனைத்தையும் விடவும் மிகவும் சிறந்தது சகல தோஷங்களையும், சகல பீடைகளையும் போக்க கூடியது மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதாகும்.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2134-topic#ixzz2yaybWb9v
Under Creative Commons License: Attribution
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.