அஷ்டலெட்சுமி தோத்திரம்![]() ஆதிலட்சுமி ---------------- காண்பதன் காட்சி யாவும் கண்டிடு கண்ணும் ஆவள் மாண்பதன் மாண்பாய் ஆன மலர்வணம் அவளே அன்றோ? தோன்றிடும் உயிர்க்கு லங்கள் தோற்றமும் ஆத்மா தானும் ஏற்றவள் ஆதி லட்சுமி இணையடி வணங்குகின்றோம். பிள்ளைப்பேறு தரும் சந்தானலட்சுமி ------------------------------------------------ புத்திரப் பேறு வேண்டின் பொங்கிடும் இன்பம் வேண்டின் நித்திரை சுகமும் வேண்டின் நின்மலைசந் தான லட்சுமி பொற் பதம் பணிந்தால் போதும் போதவும் அன்பின் அன்னை கற்பகம் போலே வந்து கருதியே காப்பாள் மாது. பொற்கலசம் அமைந்த கஜலட்சுமி -------------------------------------------- ஓம்மறைப் பொருளும் நீயே! உன்னதம் நீயே நீயே! 'தாம்' என மலர்ந்த தான தன்மையும் நீயே நீயே! நாற்கரம் கொண்ட தேவீ! நலம் தர வந்த கண்ணே! வான்மழை நீயேயன்றோ? வளர்பொழில் தருக மாதே! செல்வத்தைத் தரும் தனலட்சுமி ------------------------------------------ பொன்பொருள் வேண்டும் என்றால் பூரிப்புக் காண வெனறால் அன்பர்கள் போற்றி செய்யும் அன்னையைத் துதிக்க வேண்டும் நன்பொருள் ஆன நங்கை நலம்தரும் தனலட்சுமியை அன்பொடு வழிபட் டோர்கள் அவள் விழிக் கருணை கொள்வார். தானியங்களைத் தரும் தான்யலட்சுமி ------------------------------------------------- தானியம் இல்லை யென்றால் மானமும் வாய்ப்ப தேது? வானிலை யென்று சொன்னால் வசியது வாய்ப்ப தேது? வள்ளலும் தானே ஆகி ஊனமில் பயிரும் ஆன ஒருவளை வணங்கு வோமே. வெற்றி நல்கும் விஜயலட்சுமி ----------------------------------------- வீரமும் அன்பு தானும் விரும்பிடா மனிதர் உண்டோ? வீரமே விளைக்கும் வெற்றி வெற்றியின் உருவே அன்னை ஈரமே கொண்ட அன்னை இதனையே அளிக்க என்று சாரமாய்ப் போற்றி செய்வோம் சத்தியம் வெற்றி வாய்க்கும். கரங்கள் எட்டால் காக்கும் சிறீ மகாலட்சுமி --------------------------------------------------------- மகத்துவ மிக்க தாகி மன்னிடும் சித்தி புத்தி இகத்தினில் போக பாக்யம் இணையன தருத லோடே முகமலர்ந் தின்ப மாக முக்தியும் ஈயும் அன்னை மகாந்ர ரூப சக்தி மகாலக்சுமி போற்றி போற்றி. வீரம் நல்கும் வீரலட்சுமி ---------------------------------- புடமிட்ட பொன் போல் மேனி பொன்னென விளங்கும் கச்சு திடமுறை ஒன்பான் பனையின் மரங்களின் முன்னர் நிற்பாள் வெற்றிலை மாலை பூண்ட வீரமாம் வீரலக்சுமி கற்றவர் போற்றும் அன்னை கருணையள், பணிகுவோமே. |
aanmigam |
Related Posts
- ராகுகேது திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்22 Sep 20140
ராகு திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி ஓம் சூலஹஸ்...Read more »
- விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்25 Jun 20140
ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் ...Read more »
- 12 இராசிக்குறிய பரிகார மந்திரங்கள்!13 May 20140
12 இராசிக்குறிய பரிகார மந்திரங்கள்! 1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சன...Read more »
- வெளிநாட்டுக்கு செல்ல துணை புரியும் துர்க்கா மந்திரம்..10 May 20140
ஒருவரது வெளிநாட்டுத் தொடர்புகளை அமைத்து வைப்பதில் பிரதானமாக இருக்கும் ஒரு முக்கிய கிரகம் ராகு ஆகும். ஜாதக ரீதியாக ராகு 9–ம் இடத்தில், அல்ல...Read more »
- சர்வ தோஷ நிவாரண மந்திரம்..!28 Apr 20140
சர்வ தோஷ நிவாரண மந்திரம்..! ஓம் நமோ பகவதே விஷ்ணவேஸ்ரீ சாளக்ராம நிவாஸினேசர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினேசாளக்ராமாய ஸ்வாஹா’இ...Read more »
- காமாட்சி அம்மன் விருத்தம், கணபதி காப்பு26 Apr 20140
காமாட்சி அம்மன் விருத்தம்கணபதி காப்புமங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்த...Read more »
- அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா?17 Dec 20140
"அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா? மகளுக்கு...Read more »
- எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.17 Dec 20140
எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள்...Read more »
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.