ரமண மகரிஷி ஜெயந்தி
மௌனத்தாலே உபதேசம் செய்த ஞானியின் அவதார தினம் இன்று.
திருவண்ணாமலையில் வாழ்ந்து அத்வைத வேதாந்த கொள்கைகளை உலகுக்கு போதித்த மகான்.
1879ம் வருடம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுந்தரம் ஐயர்,அழகம்பாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் .வெங்கட ரமணன் என்ற இயர் பெயர் கொண்ட இவர் மதுரை பள்ளியில் பாடம் பித்து வந்தார்.ஒரு மரணத்தின் மூலம் தான் யார் என்ற தெளிவு பெற்று,பின் ஆன்மிக வழியில் தன பாதையை அமைத்துக் கொண்டார்.அனைத்தையும் துறந்து திருவண்ணாமலை வந்தவர்,அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தியானம் செய்து வந்தார்.பாதாள லிங்கத்தை தியானித்து வந்த இவர், உலகின் அனைத்து பகுதியிலிருந்தும் திருவண்ணாமலை ரமண ஆசிரமம் வந்தவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்?' என்பது தான்.உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் தங்களை முழுதாய் உணர்ந்துக் கொண்டால்,தீமையில் இருந்து விடுபடலாம்.நான் யார் என்று அறிந்துக் கொள்வதே முக்திக்கு முதல் படியாகும்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2132-topic#ixzz2yazJUAuT
Under Creative Commons License: Attribution
Post a Comment