GuidePedia

0

மூன்று வடிவில் முருகப்பெருமான்


நாமக்கல் அருகில் உள்ள கொல்லிமலை அடிவாரத்தில் பேளுக்குறிச்சி என்ற பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகபெருமான் மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

இவரை நேராக நின்று வணங்கினால் வேடுவனைப் போலவும், வலது புறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடது புறமாக வணங்கினால் பெண் வடிவமாகவும் மூன்று விதமாக காட்சி தருகிறார். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த முருகப்பெருமான் சிலையை பின்பற்றியே, போகர் பழநியில் உள்ள நவபாஷாண முருகப்பெருமான் சிலையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. 

முருகன் வேடன் கோலத்தில் இருப்பதால் தலையில் கொண்டை, வேங்கை மலர்க் கிரீடம், கொன்றை மலர் ஆகியவற்றை சூடியிருக்கிறார். மேலும் மார்பில் ருத்திராட்ச மாலை, காலில் காலணி, வீரத் தண்டை போன்றவற்றையும் அணிந்திருக்கிறார். 

இடது கையில் வேலும், இடுப்பில் கத்தியும், வலது கையில் சக்தி ஆயுதம் எனப்படும் வஜ்ரவேலும் கொண்டு முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...