GuidePedia

0

சதுர்த்தித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும்

சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. 

இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. பதினைந்து திதிகள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். இவ்வாறுள்ள பதினைந்து திதிகள் வருமாறு; அமாவாசை நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை. 

1. பிரதமை முதலாம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன. 

2. துதியை இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள். 

3. திருதியை மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும். 

4. சதுர்த்தி நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 

`சுக்லாம் பரதரம்` என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும். 

சதுர்த்தித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

விநாயகர் சதுர்த்தி ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தித் திதி. 
சங்கடஹர சதுர்த்தித் தொடக்கம் ஆவணித் தேய் பிறைச் சதுர்த்தித் திதி. 

5. பஞ்சமி ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் நமசிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். 

பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும். 

ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுட்டிக்கப்படும். 

6. சஷ்டிஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும். 

சஷ்டித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு: 

கந்தசஷ்டி விரத நிறைவு: ஐப்பசி மாத வளர்பிறைச் சஷ்டித் திதி. 
விநாயகருக்கான கார்த்திகைச் சட்டி 21 நாள் விரத நிறைவு: 
மார்கழி வளர்பிறைச் சட்டித் திதி. 

7. சப்தமிஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும். 

8. அஷ்டமிஎட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலை கள். அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். 

அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும்.` அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது. 

அஷ்டமித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு: 

திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 
சிவனுக்குரிய அஷ்டமி விரதம் வைகாசி வளர்பிறை அஷ்டமி. 
கேதார கௌரி விரதம் தொடக்கம் புரட்டாதி வளர்பிறை அஷ்டமி. 

9. நவமி ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும். 

நவமித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு: 

இராமபிரான் நவமித் திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் இராம நவமி என்ற பெயரில் சித்திரை மாத வளர்பிறை நவமியில் கொண்டாடப்படுகிறது. மகாநவமி புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கும் நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி மகாநவமி என்று குறிப்பிடுகின்றனர். 

10. தசமி பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 

`தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்` திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.  தசமித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு: விசய தசமி புரட்டாதி வளர்பிறைத் தசமி. இது நவராத்திரியைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள். இதை வட இந்தியாவில் ராம்லீலா என்று கொண்டாடுவர். 

11. ஏகாதசி பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று. மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. 

இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்` என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். 

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். 

ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர். இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். 

பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. 

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், 

பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. 

12. துவாதசி பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும். 

13. திரயோதசிபதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும். 

14. சதுர்த்தசி பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும். 

15. பௌர்ணமி பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...