சிவாய நம...
திருஞான சம்பந்தர் உரிமையுடன் இறைவனை வரம் கேட்கும் பாடலின் மூதல் ஆறு வரிகள் பொருளுரையுடன்...
"இடரினும்,தளரினும் எனது உறு நோய்
தொடரினும்,உன கழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினிலில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு?ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்?ஆவடுதுறை அரனே!
பொருளுரை:
திருப்பாற்கடலில்,அமுதம் பெறும் பொருட்டு கடைந்தபோது தோன்றிய நஞ்சினை கழுத்தில் அடக்கி தேவர்களை காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டு துன்பம் உண்டானாலும்,இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சியுற்றாலும்,தீவினையினால் நோய் தொடர்ந்து வந்தாலும்,உன் திருவடிகளை தொழுது வணங்குவேன்.அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ?திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்கு தரவில்லையானால்,அது உன் திருவருளுக்கு அழகாகுமா?
திருச்சிற்றம்பலம்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.