GuidePedia

0
கும்பாபிஷேகம் செய்வது ஏன்?

கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். அதாவது மூலவர் ஆற்றல் பிம்பத்தில் இருந்து கும்பத்துக்கு வந்து விடும். இதையடுத்து திருப்பணிகள் நடைபெறும். இதற்கிடையே கும்பத்தில் உள்ள சக்தியை பாலாயம் செய்து பூஜைகள் செய்து வருவார்கள். 

யாக சாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியை பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். யாக சாலை பூஜைகள் முடிந்ததும் வேத பாராணயங்களால், திருமுறை பாராயணயத்தால் சக்தி ஏற்றப்பட்ட புனித நீர் பிஷேகம் செய்யப்படும். 

இதன் மூலம் மூலவர் விக்கிரகம் புதிய சக்தியை பெறும். மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள். மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீகமாகும்

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...