சாற்றுவது ஏன்?
மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையிலுள்ள சிறு புத்தூரில் ஸ்ரீகேசவாசார்யாருக்கு மகனாக சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் அநந்தாழ்வான். சிறிய வயதிலிருந்தே பகவத் சிந்தனையில் மூழ்கியவர்.
ஸ்ரீரங்கத்தில் பகவத்ராமானுஜரின் கோஷ்டியில் இருந்த அநந்தாழ்வான் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் என்ற பாசுரத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, புஷ்பமண்டபமான திருமலையில் நித்தியவாசம் செய்யும் திருவேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வாருண்டோ? எனக் கேட்டார்.
அதற்கு அடியேன் செல்கிறேன் என்றார் அநந்தாழ்வான்.
இராமானுஜர் நீரல்லவோ ஆண்பிள்ளை என்று பாராட்டி, ஆசிர்வதித்து திருமலைக்கு அனுப்பி வைத்தார்.
திருமலையில் திருக்கோயிலுக்கருகே ஏரியை அமைத்து, பூந்தோட்டம் அமைக்க எத்தனித்து திருமலையானை தரிசித்து, குருவின் சங்கல்பம் நிறைவேற அருள் புரிய வேண்டும் என பிரார்த்தித்தார்.
அநந்தாழ்வானும் அவருடைய துணைவியாரும் ஏரியை அமைக்கும் பணியை செய்யத் தொடங்கினர்.
அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணி, ஆனாலும் இருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு பணியைச் சிறப்பாக செய்து வந்தனர்.
அநந்தாழ்வான். மண்ணை கடப்பாரையால் தோண்டி, மண்கூடையில் போட்டு மனைவியிடம் கொடுக்க, அவர் சிறிது தொலைவில் சென்று கொட்டி விட்டு மறுபடியும் வந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த திருமலையான், சிறிய பிரம்மச்சாரியாக வடிவெடுத்து, அநந்தாழ்வானுக்கு உதவ வந்தார்.
எவருடைய உதவியையும் ஏற்காமல் தனது குருவான ஸ்ரீராமனுஜரின் கட்டளையை சிறமேற்கொண்டு பணியை செய்தார்கள்
அநந்தாழ்வான் தம்பதியர்.
சிறுவன் அவர்களுக்குதான் உதவுவதாக கூறியதும், நீ சிறுபிள்ளை. உன் உதவி நான் ஏற்க மாட்டேன். குறுக்கே வராதே என்றார்.
அச்சிறுவன் அவருடைய மனைவியிடம் சென்று, அம்மா! சிறிது நேரம் நான் உங்களுக்கு பதிலாக இந்த மண்ணை சுமக்கிறேன்.
பின்பு நீங்களே இந்தப் பணியை செய்யுங்கள்.
சற்று இளைப்பாறுங்கள் என்றான்.
களைத்து போன அநந்தாழ்வானின் மனைவி தான் சுமக்கும் மண் கூடையை கொடுத்தாள்.
அச்சிறுவன் வேகமாக மண்ணை கொட்டிவிட்டு அவரிடம் கூடையை கொடுத்தான்.
தன் மனைவியின் வேகத்தினை கவனித்த அநந்தாழ்வான் அதற்கான காரணம் கண்டறிந்தார்.
அச்சிறுவனை அழைத்து தனது தெய்வீகப்பணியில் எதற்காக குறுக்கே வந்தாய்? என்று கோபித்துக் கொண்டு அச்சிறுவனை பிடிப்பதற்காக ஓடினார்.
அச்சிறுவனும் வேகமாக ஓட, ஓடுகின்ற சிறுவன் மீது அநந்தாழ்வான் தன் கையிலிருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.
அது அச் சிறுவனின் மோவாய் மீது பட்டது. இரத்தம் கொட்டியது.
சிறுவன் அதையும் பொருட்படுத்தாமல் கோயிலுக்குள் சென்று விட்டான்.
மறுநாள், கருவறையில் திருமலையானின் மோவாயிலிருந்து இரத்தம் கசிந்தது. அதை அறிந்த அநந்தாழ்வான் நடந்ததைக் கூறி வருத்தினார்.
ஸ்வாமி, உன்னிடமுள்ள பச்சை கற்பூரம் பூசும் என்றார்.
இரத்தம் வடிவது நின்றது.
அன்றிலிருந்து ஸ்வாமிக்கு மோவாயில் பச்சை கற்பூரம் பூசுகிறார்கள்.
அநந்தாழ்வான் எறிந்த கடப்பாரையும் திருமலையில் மஹதுவாரத்தின் சுவற்றின் மேல் இன்றும் காணலாம்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.