சாம்பிராணி
இறைவழிபாட்டில் சாம்பிராணி முக்கிய இடம் பெறுகிறது.
பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது.
அதுபோல், கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பதற்காகவே பூஜையில் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன;
அவற்றின் மருத்துவ குணங்கள் என்ன என்பது பலருக்குத் தெரியாது.
இது இருமல், காமாலை, நாள் பட்ட புண், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
சாம்பிராணி வந்த கதை.....
மத வழிபாடு முதல் மருத்துவப் பயன்பாடு வரை உதவும் சாம்பிராணி எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறுவயதில் அரிஸ்ட்டாட்டிலிடம் கல்வி பயின்றுகொண்டு இருக்கும்போது, தன் ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார்.
பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடு களின் படையெடுப்பின்போது, மூட்டை மூட்டையாக சாம்பிராணியை பெற்று அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பிவைத்தார்.
சாம்பிராணி என்பது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata) எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரத்தில் இருந்து வடியும் பால் ஆகும்.
பிராங்கின்சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் தான் நாளடைவில் காய்ந்து, கடினமாகி சாம்பிராணி என்ற பெயரில் நமக்குக் கிடைக்கிறது.
இது மிக மெதுவாகக் கடினமாகி ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையும் உடைய சாம்பிராணியாக மாறுகிறது.
எரித்தால் மிகுந்த மணம் பரப்பும் இந்த ஃபிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிலும் அதிமாகக் காணப்படுகின்றன.
தமிழ் நாட்டில் கல்வராயன், சேர்வராயன் மலைச் சரிவுகளில் 500 மீ. - 700 மீ. உயரத்தில் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
பால் வடியும் ஒரு மரத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 1 கிலோ வரை சாம்பிராணி பெற முடியும்!
சாம்பிராணி, பாஸ்வெல்லியா செர்ராட்டா எனப்படும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
ஆவியாக்கப்பட்ட சாம்பிராணியில் போஸ்வெல்யா, டர்பென்டைன் உள்ளிட்ட எண்ணெய்களை எடுக்கின்றனர்.
இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்க ப்படுகிறது.
சோப்பு தயாரிப்பிலும் சாம்பிராணி பயன் படுத்தப்படுகிறது.
சாம்பிராணி கிடைக்கும் பிராங்கின்சென்ஸ் மரத்திலிருந்துதான் கோந்தும் கிடைக்கிறது.
இந்த கோந்துடன் தண்ணீர் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
Post a Comment