வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவக்கிரகத்தில் உள்ள குருவுக்கு சுண்டல், கடலை நெய்வேத்தியம் செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர் மாலை அல்லது முல்லைமலர் மாலை சாற்றலாம்.
தட்சிணாமூர்த்தி நெற்றியில் கஸ்தூரி பொட்டு வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களுக்கும் ஹோமம் வளர்த்து அபிஷேகம் செய்யலாம். நவக்கிரகத்தில் உள்ள குருவுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்வதுபோல் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்பதால் அவருக்கு பூஜை வழிபாடு செய்யலாம்.
நவக்கிரகங்களில் குரு வுக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம் ஆகியவற்றை அங்கேயே தானம் செய்துவிட வேண்டும். வீட்டுக்கு எடுத்து வரக்கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்திக்கு செய்த அர்ச்சனை பொருட்களை வீட்டுக்கு கொண்டு போகலாம்.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தட்சிணா மூர்த்திக்கு படம் வைத்து தீபம் ஏற்றி ஜெயபாராயணம் செய்யலாம். தட்சிணாமூர்த்தி படம், விக்கிரகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.
ஆனால் நவக்கிரக படங்களை வைத்து வழிபடக் கூடாது. சொல்லாலும், செயலாலும் பிறர்மனம் புண்படாதபடி நடந்து கொள்ளுங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். குரு பகவானின் அருள் பூரணமாக கிட்டும்.
Post a Comment