குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் 'கஜகேசரி யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம். செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.
குரு சந்திர யோகம்:
சந்திரனுக்கு குரு 1, 5, 9-ல் காணப்பட்டால் இந்த 'குரு சந்திர யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.
குருமங்கள யோகம்: குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் இந்த 'குரு மங்கள யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
ஹம்ச யோகம்:
சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், இந்த 'ஹம்ச யோகம்' உண்டாகிறது. நல்ல உடல் அமைப்பையும் ஒழுக்கமான வாழ்க்கையும் பெற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.
சகட யோகம்:
குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் இந்த 'சகட யோகம்' உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுய ஜாதகத்தில் எப்படியுள்ளது என்பதைக் கண்டறிந்து, தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலம் அமையும்.
Post a Comment