GuidePedia

0
திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கால நேரத்தில் இங்குள்ள நாகர்களை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

தவிர நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் கற்சிலைகளை வாங்கி வந்து, இந்த சன்னிதியின் முன்னே வைத்து விட்டுச் செல்கின்றனர். இப்படிச் சேர்ந்த சிலைகள் ஆலயத்தில் தனி இடத்தில் நிறைய உள்ளன. அடுத்து நாகப்ப சுவாமியின் சன்னிதி உள்ளது.

விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த சன்னிதிக்கு அழைத்து வர, அவர்களை பாதித்த விஷ பாதிப்பு வெகுவாகக் குறையும் என்கின்றனர் பக்தர்கள். இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. வீட்டினுள், குடிசையுனுள் ஏதாவது பாம்பு புகுந்து விட்டால் யாரும் அதை அடிப்பதில்லை.

ஒரு காலி குடத்தை அந்தப் பாம்பின் அருகே சாய்த்து வைக்கிறார்கள். பாம்பு அந்த குடத்தினுள் புகுந்து கொள்ளும். பின்னர் அந்தக் குடத்தை மூடி, பாம்பை கொண்டு வந்து ஆலயத்தில் விட்டு விடுகின்றனர். இந்த நாகப்ப சுவாமி பல நூறு குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார்.

இந்த குலமக்கள் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தாய்நாடு வரும் அவர்கள் தவறாது இங்கு வந்து, தங்கள் குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புத்தாடை அணிவித்து பொங்கல் வைத்து படைத்து மனநிம்மதியோடு இல்லம் திரும்புவது வாடிக்கையான சம்பவம்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...